அமெரிக்காவில் உள்ள தனது செயல்பாடுகளின் பெரும்பான்மையான பங்குகளை சில்வர் லேக் (Silver Lake), ஆரக்கிள் (Oracle) மற்றும் எம்.ஜி.எக்ஸ் (MGX) உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு விற்ற பின்னர், டிக் டொக் தொடர்ந்து அமெரிக்காவில் தொடர்ந்து செயற்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த முதலீட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தலா 15% பங்குகளை வைத்திருக்கும்.
அதேநேரம் சீனாவின் பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனம் இந்த கூட்டு முயற்சியில் 19.9% பங்குகளை வைத்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது