BREAKING NEWS

நில்கல வனம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனம் – வர்த்தமானி வெளியீடு

PR
priya priya punidha in Latest Updates
Report
நில்கல வனம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனம் – வர்த்தமானி வெளியீடு

இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான நில்கல வனம் அதிகாரப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. 

சுமார் 40,684.99 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட நில்கல வனம், இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாகும். 

தேசிய வனப்பரிபாலன வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக மாற்றப்பட்டுள்ளது. 

இது குறித்துச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவிக்கையில், 2025 உலகச் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இந்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இலங்கை போன்ற வெப்பமண்டல நாட்டிற்கு, இவ்வாறான வனப்பகுதிகளைப் பாதுகாப்பது பல்லுயிர் பெருக்கத்திற்கு மட்டுமன்றி, வனவிலங்குகளின் வாழ்விடங்களை உறுதிப்படுத்தவும் மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்