BREAKING NEWS

ஒலியமைப்பு சீரின்மையால் மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!

PR
priya priya punidha in Latest Updates
Report
ஒலியமைப்பு சீரின்மையால் மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதன்போது ஒலியமைப்பு சீரின்மை, காரணமாக பின்னால் இருந்த உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் விளங்காததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இது குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் த.ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில், சபை மண்டபத்தில் Projector உள்ளது. ஆனால் அது இயக்கப்படுவது இல்லை. கடந்த கூட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்போது அதனை projector மூலம் காண்பித்தால் நன்று.

கடந்த கூட்ட அறிக்கையில் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கூறும்போது ஒலிவாங்கி சீரின்மையால் பின்னால் இருப்பவர்களுக்கு விளங்கவில்லை. ஆகவே projector இனை இயங்க வைக்க வேண்டும் என்றார்.

இதன்போது பின்னால் இருந்த உறுப்பினர்களும் தமக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் விளங்கவில்லை என்ற சத்தமிட்டனர்.

அதற்கு பதிலளித்த தவிசாளர், இதுவரை அவ்வாறான நடைமுறை இல்லை. அப்படி காண்பிக்க முடியாது. அனைவருக்கும் அறிக்கை தரப்பட்டுள்ளது.என்றார். ஒலிவாங்கி மற்றும் ஒலிபெருக்கியை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.