BREAKING NEWS

2028 உலகக் கிண்ண வாய்ப்பும் பறிபோகும் – நெருக்கடியில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

PR
priya priya punidha in Latest Updates
Report
2028 உலகக் கிண்ண வாய்ப்பும் பறிபோகும் – நெருக்கடியில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணி விளையாடாவிட்டால், அதனால் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு (ICC) ஏற்படும் நஷ்டத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபையிடமிருந்து அறவிடுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பங்களாதேஷ் அணி தொடரில் பங்கேற்கத் தவறினால், சர்வதேச கிரிக்கெட் சபையிடமிருந்து அந்நாட்டு கிரிக்கெட் சபைக்குக் கிடைக்கும் வருடாந்த நிதி ஒதுக்கீடுகள் நிறுத்தப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விரைவில் உத்தியோகபூர்வ தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. 

ஒருவேளை இந்த உலகக் கிண்ணத் தொடரை பங்களாதேஷ் புறக்கணித்தால், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பையும் அந்த அணி இழக்க நேரிடும்.