BREAKING NEWS

T20 உலகக்கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் நீக்கம்

PR
priya priya punidha in Latest Updates
Report
T20 உலகக்கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் நீக்கம்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி இத்தொடரில் பங்கேற்பதை சர்வதேச கிரிக்கட் சபை (ICC) உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்கப் பாதுகாப்பு காரணங்களைக் கூறி பங்களாதேஷ் மறுப்புத் தெரிவித்திருந்தது. 

போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஐசிசி நிராகரித்த நிலையில், இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஐசிசி தரவரிசையின் அடிப்படையில், தகுதி பெறாத அணிகளில் முன்னிலையில் இருந்த ஸ்கொட்லாந்து அணிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஸ்கொட்லாந்து அணி இப்போது குழு ‘C’ இல் இடம்பெறும். இதன்படி, அந்த அணி இத்தாலி, நேபாளம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும். 

ஸ்கொட்லாந்து அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது.