BREAKING NEWS

டிட்வா பாதிப்பு: இழப்பீடு வழங்குவதில் அரசாங்கம் காட்டும் முன்னேற்றம்

PR
priya priya punidha in Latest Updates
Report
டிட்வா பாதிப்பு: இழப்பீடு வழங்குவதில் அரசாங்கம் காட்டும் முன்னேற்றம்

டிட்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு வழங்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அதன்படி, டிட்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக சமையலறை உபகரணங்கள் கொள்வனவிற்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபாய் கொடுப்பனவில் தற்போது 70% வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

25 மாவட்டங்களில் மொத்தம் 156,805 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவுக்காகக் கணக்கிடப்பட்டதுடன், அவற்றில் 109,512 குடும்பங்களுக்கு இதுவரை குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளது. 

நுவரெலியாவில் 1,191 குடும்பங்கள் இந்த உதவித்தொகையைப் பெற தகுதி பெற்றிருந்ததுடன், அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல், மாத்தளை மாவட்டத்தில் 1,253 குடும்பங்களில் 1,143 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், அது 91% முன்னேற்றம் ஆகும்.

கண்டி மாவட்டத்தில் 8,409 குடும்பங்களில் 7,083 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அது 84% முன்னேற்றம் ஆகும். 

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க கணக்கிடப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

மன்னார் மாவட்டத்தில் ரூபாய் 50,000 கொடுப்பனவு 98% வழங்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 99% பயனாளிகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் 91% வீதமானவர்களுக்கும், அநுராதபுர மாவட்டத்தில் 84% பயனாளிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் 93% பயனாளிகளுக்கும் உதவித்தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அனர்த்தத்திற்குப் பின்னர் வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் உதவித்தொகையை செலுத்துவதில் மொத்த முன்னேற்றம் 97% ஆகும். 

25 மாவட்டங்களில் 435,104 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறத் தகுதி பெற்றிருந்ததுடன், அவற்றில் 422,900 குடும்பங்களுக்கு இதுவரை இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி, களுத்துறை, நுவரெலியா, காலி, ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தகுதிபெற்ற அனைத்து குடும்பங்களுக்கும் கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. 

கண்டி மாவட்டத்தில் 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதில் 99% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

மாத்தளை மாவட்டத்தில் 95%, யாழ்ப்பாண மாவட்டத்தில் 88%, மன்னார் மாவட்டத்தில் 94%, வவுனியா மாவட்டத்தில் 99%, முல்லைத்தீவு மாவட்டத்தில் 98%, மட்டக்களப்பு மாவட்டத்தில் 98%, திருகோணமலை மாவட்டத்தில் 98%, குருநாகல் மாவட்டத்தில் 98%, புத்தளம் மாவட்டத்தில் 97%, அநுராதபுர மாவட்டத்தில் 98%, பொலன்னறுவை மாவட்டத்தில் 97%, இரத்தினபுரி மாவட்டத்தில் 99% மற்றும் கேகாலை மாவட்டத்தில் 90% ஆகிய பகுதிகளுக்கு 25000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது.