BREAKING NEWS

பத்து வருடங்களுக்கு மேலாக சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை: முக்கிய நபர் கைது

PR
priya priya punidha in Latest Updates
Report
பத்து வருடங்களுக்கு மேலாக சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை: முக்கிய நபர் கைது

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களையும் அதன் சாரதிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

நேற்றிரவு விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நபரது டிப்பர் வாகனமே காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களில் ஒன்று உரிய அனுமதி பத்திரங்களுடன் இருந்ததினால் டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.