2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் மாத்திரம் 223,645 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இக்காலப்பகுதியில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 அன்று இடம்பெற்றது. 

அன்றைய தினம் 10,483 பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 41,603 ஆகும். 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேரும், ரஷ்யாவிலிருந்து 22,876 பேரும், ஜேர்மனியிலிருந்து 14,431 பேரும் வருகை தந்துள்ளதாக அந்தத் தரவுகள் மேலும் குறிப்பிடுகின்றன.

இலங்கை சினிமா