BREAKING NEWS

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

PR
priya priya punidha in Latest Updates
Report
இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இந்நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

குறித்த வைரஸ் தொடர்பாக இந்நாட்டு சுகாதாரப் பிரிவினர் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிப்பா என அழைக்கப்படும் இந்த வைரஸ் ஆசிய பிராந்தியம் ஊடாக பரவக்கூடும் என தெரியவந்துள்ள நிலையில், ஆசிய பிராந்தியத்தின் பல நாடுகள் இது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளன.

தாய்லாந்து, சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இது தொடர்பாக விமான நிலையப் பரிசோதனைகளையும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து தொற்றும் ஒரு வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதன் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை காணப்படுவதால் ஆசிய பிராந்தியத்தில் பல நாடுகள் இது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.