ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் (27) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 287 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 383 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 11 கிராம் 650 மில்லிகிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 865 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 78942 கஞ்சா செடிகளும், 111 கிராம் குஷ் போதைப்பொருளும், 095 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 481 போதை மாத்திரைகளும், 01 கிலோ 423 கிராம் 410 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 01 கிலோ 286 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 09 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை சினிமா