BREAKING NEWS

உள்ளூர் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்க ஏப்ரல் 1 முதல் மாற்றம்

PR
priya priya punidha in Latest Updates
Report
உள்ளூர் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்க  ஏப்ரல் 1 முதல் மாற்றம்

தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் மீதான சிறப்பு வரியை நீக்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால் தேங்காய் எண்ணெய்யுடன், தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களும் சந்தைக்கு வரும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது உள்ளூர் தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய பிரச்சாரத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே இந்த அச்சத்தை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், பாமாயில் மற்றும் பிற எண்ணெய்கள் சந்தையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.