வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும். 

ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதேபோல், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும். 

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

இலங்கை சினிமா