BREAKING NEWS

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக சபை இன்று மீண்டும் கூடவுள்ளது

PR
priya priya punidha in Latest Updates
Report
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக சபை இன்று மீண்டும் கூடவுள்ளது

அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட 48 மணித்தியால கால அவகாசம், நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில், இன்றைய நிர்வாக சபை கூட்டம் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹன்சமல் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது