2025 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர இன்று (03) தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்த போது வெளிநாட்டு கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாகவும், தற்போது குறைந்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பிரதி அமைச்சர் 2025 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்றார்.