BREAKING NEWS

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி

PR
priya priya punidha in Latest Updates
Report
புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எல்.எஸ்.ஐ. ஜயரத்னவின் பெயரை அரசியலமைப்பு சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

நீண்ட காலமாக இழுபறியாக காணப்பட்ட கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஐந்தாவது முறையாவாகவும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவின் பெயர் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.