BREAKING NEWS

‘ஜனநாயகன்’ பட சென்சார் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

PR
priya priya punidha in சினிமா / பொழுதுபோக்கு
Report
‘ஜனநாயகன்’ பட சென்சார் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜன நாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை. 

தணிக்கை சான்றிதழ் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இதனிடையே கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 

ஜன நாயகன் படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை பட தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. 

மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் நேற்று (09) வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சனையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய மனுவை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜன நாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.