BREAKING NEWS

வைத்தியரானார் நடிகை ஸ்ரீலீலா

PR
priya priya punidha in சினிமா / பொழுதுபோக்கு
Report
வைத்தியரானார் நடிகை ஸ்ரீலீலா

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. தமிழில் ‛பராசக்தி’ படத்தின் மூலம் இந்த பொங்கலுக்கு அறிமுகமானார். 

அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படத்தில் நடிக்கிறார். இதுதவிர அஜித்தின் 64வது படத்திலும் நடிக்க போகிறார். 

கர்நாடகாவை சேர்ந்த இவர் நடித்துக் கொண்டே எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். 

இவர்களது குடும்பத்தில் உள்ள அனேக பேர் பெரிய துறையில் பொறுப்பில் உள்ளனர். இதனால் நடித்தாலும் கண்டிப்பாக வைத்தியராக படித்து முடிக்க வேண்டும் என அவரது குடும்பத்தில் தெரிவித்திருந்தனர். 

அதை சவாலாக ஏற்று படிப்பை முடித்துவிட்டார். நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் வைத்தியர் பட்டத்தை ஸ்ரீலீலா பெற்றார். 

இதுதொடர்பான போட்டோ, வீடியோ வைரலானது. இனி அவர் நடிகை மட்டுமல்ல வைத்தியர் ஸ்ரீலீலாவும் தான்.