BREAKING NEWS

விசாரணைக்கு கால அவகாசம் தாருங்கள்: முன்னாள் ஜனாதிபதியின் மனைவி கோரிக்கை

PR
priya priya punidha in Latest Updates
Report
விசாரணைக்கு கால அவகாசம் தாருங்கள்: முன்னாள் ஜனாதிபதியின் மனைவி கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளார்.

உடல்நல குறைப்பாட்டின் காரணமாக பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆஜராக முடியாது என கடிதம் மூலம் தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவர்கள் அவரை வீட்டிலேயே சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியதாகவும், தொடர்புடைய வாக்குமூலத்தை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கு தனிப்பட்ட பயணத்திற்காக 1.66 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்போவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமீபத்தில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.