Iran நாட்டின் உச்சத் தலைவரான Ali Khamenei மரணத்தைத் தொடர்ந்து, அதிகார வெற்றிடத்தைத் தவிர்க்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இடைக்கால தலைமைத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் படி, உச்சத் தலைவர் பதவியில் காலியிடம் ஏற்பட்டால், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் அந்தப் பொறுப்புகளை தற்காலிகமாக ஏற்றுக்கொள்கிறது. இந்த இடைக்காலக் குழுவில், Masoud Pezeshkian, தலைமை நீதிபதி Gholam-Hossein Mohseni-Eje’i மற்றும் கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினரான Alireza Arafi இணைந்து பணியாற்றுவர்.
Guardian Council உறுப்பினராக உள்ள அராஃபி, சட்டப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மூவரும் இணைந்து உச்சத் தலைவரின் அலுவலக அதிகாரங்களை கூட்டாகப் பயன்படுத்துவார்கள்.
இடைக்கால கவுன்சில், ஆயுதப்படைகளின் கட்டளையில் தொடர்ச்சியையும் முக்கிய அரசு நிறுவனங்களின் மேற்பார்வையையும் உறுதி செய்யும். அதேவேளை, Assembly of Experts நிரந்தர வாரிசைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை முன்னெடுக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த நடைமுறை, அதிகார மாற்றத்தின் போது நிலைத்தன்மையை பேணுவதற்காக வடிவமைக்கப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நிரந்தர உச்சத் தலைவர் தேர்வு செய்யப்படும் வரை, இடைக்காலத் தலைமைக்குழு நாட்டின் உயர் நிர்வாக பொறுப்புகளை மேற்கொள்ளும்.