யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீர் தீ விபத்து: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!யாழ்ப்பாணம், சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில், இன்று (02) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மருதனார்மடம் பகுதியில் இன்று பகல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்தத் தீ விபத்து எதிர்பாராத விதமாகத் தானாகவே ஏற்பட்டதா அல்லது யாரேனும் திட்டமிட்டு தீ மூட்டினரா என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது. இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, மக்கள் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் இக்கட்டான சூழலில், மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
02 Mar 2026 | 12:18 PM
13 views
யாழில் திடீர் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்!
DH
dhusanthi dhusi
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
இலங்கையிலிருந்து 126 சீனப் பிரஜைகள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்!
04 Apr 2026 · 5:12 AM