BREAKING NEWS

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளிலிருந்து உடனடியாக வெளியேற அமெரிக்கா அறிவிப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
மத்திய கிழக்கில் உள்ள நாடுகளிலிருந்து உடனடியாக வெளியேற அமெரிக்கா அறிவிப்பு

“கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்” காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளிலிருந்து “உடனடியாக வெளியேறுங்கள்” என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது குடிமக்களிடம் கோரியுள்ளது.

அந்தத் திணைக்களத்தின் தூதரக விவகாரங்களுக்கான அதிகாரி ஒருவர் சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில், பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், காசா பகுதி, ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள், தற்போது செயல்பாட்டில் உள்ள வணிகப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உதவி தேவைப்பட்டால் +1-202-501-4444 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். அமெரிக்கா அல்லது கனடாவில் இருப்பவர்கள் +1-888-407-4747 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம் என ஒரு சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திலிருந்து சமீபத்திய பாதுகாப்பு தகவல்களைப் பெற அரசுத் துறையின் பயணிகள் பதிவு இணையதளத்தில் பதிவு செய்யுமாறு உதவி செயலாளர் மோரா நம்தார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், குறிப்பாக அமெரிக்க இலக்குகளை குறிவைத்து ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும், இந்நாடுகளில் பல அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியிருந்தன.