BREAKING NEWS

பிராந்திய பதற்றத்தால் மத்திய கிழக்கு நோக்கிய விமான சேவை ரத்து!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
பிராந்திய பதற்றத்தால் மத்திய கிழக்கு நோக்கிய விமான சேவை ரத்து!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

பயணிகளினதும், விமானங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகள் நிறைவடையும் வரை இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் நடைமுறையில் இருக்கும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த பயணிகள், தத்தமது விமான நிறுவனங்களைத் (Airlines) உடனடியாகத் தொடர்புகொண்டு, தமது பயண அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பிராந்தியப் பாதுகாப்பு நிலைமைகளைத் தொடர்ந்து சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை கண்காணித்து வருகின்றது. பாதுகாப்புத் தரப்பினரின் பரிந்துரைகளுக்கு அமைய, அடுத்தகட்டத் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.