BREAKING NEWS

“பென்-குரியன்: விமான சேவை படிப்படியாக மீண்டும் திறப்பு”

PR
priya priya punidha in Latest Updates
Report
“பென்-குரியன்: விமான சேவை படிப்படியாக மீண்டும் திறப்பு”

இஸ்ரேலின் பிரதான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான பென்-குரியன் விமான நிலையம், விமானச் சேவைகளைப் படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய வான்பரப்பை புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இரண்டு கட்டங்களின் கீழ் படிப்படியாகத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

முதலாம் கட்டம்: மணித்தியாலத்திற்கு ஒரு பயணிகள் விமானத்தை மாத்திரம் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்டம்: மணித்தியாலத்திற்கு இரண்டு பயணிகள் விமானங்கள் வரை சேவைகளை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்படும் குறிப்பிட்ட காலவரையறை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. 

பின்னணி ஈரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பமானதை அடுத்து, கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலின் வான்பரப்பு முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.