BREAKING NEWS

மத்திய கிழக்கு மோதல்கள்: துபாயில் சிக்கிய தமிழ் பிரபலங்கள்

PR
priya priya punidha in சினிமா
Report
மத்திய கிழக்கு மோதல்கள்: துபாயில் சிக்கிய தமிழ் பிரபலங்கள்

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து உலகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

முக்கியமாக வளைகுடா நாடுகள் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்பதால் பல விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஈரான் ராணுவம் துபாயிலுள்ள அமெரிக்க ஆதரவு நிறுவனங்களைத் தாக்கி வருகிறது. 

ஐக்கிய அமீரகம் ஈரானின் தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் தாக்குதல் ஏவுகணைகளை வானிலேயே அழித்தும் வருகின்றன. 

துபாயில் பல பிரபலங்கள், இந்திய மக்கள் பலரும் துபாயில் சிக்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் வசந்த் ரவியும் துபாயில் உள்ளாராம். 

அவர் தனது இன்ஸ்டாவில், பிளான் செய்ததை விட துபாயில் அதிக நாள் இருப்பது போல் ஆனது, இங்கே சிக்கிக்கொண்டேன். இங்கு நடப்பவை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என பதிவு செய்துள்ளார்.