BREAKING NEWS

அஜித் புதிய 3 பட திட்டங்கள்: ரசிகர்கள் காத்திருப்பு

PR
priya priya punidha in சினிமா
Report
அஜித் புதிய 3 பட திட்டங்கள்: ரசிகர்கள் காத்திருப்பு

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64 ஆவது படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. 

AK 64 படத்தின் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் AK 66 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

மங்காத்தா கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதுபற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

AK 64 ஆதிக், AK 66 வெங்கட் பிரபு என்றால், AK 65 படத்தை யார் இயக்கப்போகிறார் என்கிற கேள்வி எழும். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புள்ளது என்கின்றனர். ஆனால், இது உறுதியான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.