BREAKING NEWS

க.பொ.த (சாதாரண தர) பரீட்சை பெறுபேறுகள் – ஏப்ரலின் பின்னர் வெளியீடு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
க.பொ.த (சாதாரண தர) பரீட்சை பெறுபேறுகள் – ஏப்ரலின் பின்னர் வெளியீடு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சை பெறுபேறுகள், ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் செய்முறைப் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முதலாம் கட்டமாக மார்ச் 12 முதல் மார்ச் 23 வரையும் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 10 வரையும் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் செய்முறைப் பரீட்சைகள் மதிப்பீட்டு பணிகள் எதிர்னரும் ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெறவுள்ளன.

மேற்கண்ட அனைத்து மதிப்பீட்டு நடவடிக்கைகளும் மற்றும் செய்முறைப் பரீட்சைகளும் முழுமையாக நிறைவடைந்த பின்னர், பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி திகதி தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.