BREAKING NEWS

ஈரானின் உயர் தலைவர் அலி கமெய்னியின் இறுதிச் சடங்கு: மஷாத்தில் நல்லடக்கம் செய்யத் தீர்மானம்!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
ஈரானின் உயர் தலைவர் அலி கமெய்னியின் இறுதிச் சடங்கு: மஷாத்தில் நல்லடக்கம் செய்யத் தீர்மானம்!

இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உயர் தலைவர் அலி கமெய்னியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் (Imam Reza shrine) நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஷாத்தில் உள்ள புனிதத் தலத்தில், கமேனியின் தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்யக் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

மஷாத்துக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாக, தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘கிராண்ட் இமாம் கமேனி’ தொழுகை கூடத்தில், பொது மக்கள் விடைபெறுவதற்கான பிரமாண்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தெஹ்ரான் நகரின் பல பகுதிகளில் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு, இறுதிச்சடங்குகள் நடைபெறும் திகதி மற்றும் நேரம் ஆகியவற்றை ஈரான் அரசு மிகவும் இரகசியமாக வைத்திருக்கிறது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஈரானில் 40 நாள்கள் தேசிய துக்க தினமாகவும், 7 நாள்கள் பொது விடுமுறையாகவும் அந்நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.