BREAKING NEWS

Tehran கிழக்குப் பகுதியின் வெடிப்புச் சத்தங்கள்

PR
priya priya punidha in Latest Updates
Report
Tehran கிழக்குப் பகுதியின் வெடிப்புச் சத்தங்கள்

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கிழக்குப்பகுதியில் இன்றுகாலை மிகப்பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்திச் சேவை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தெஹ்ரானின் கிழக்குப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெடிப்புச் சத்தங்களைத் தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் கரும்புகை எழுந்ததாகவும் அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக தெஹ்ரானின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இஸ்ரேலிய வான்படைத் தாக்குதல்களை முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது கிழக்குப் பகுதியிலும் வெடிப்புச் சத்தங்கள் பதிவாகியுள்ளன.

இந்த வெடிப்புச் சம்பவங்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.