BREAKING NEWS

சுற்றுலாத்துறையில் மீண்டும் எழுச்சி: பெப்ரவரியில் 2.79 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
சுற்றுலாத்துறையில் மீண்டும் எழுச்சி: பெப்ரவரியில் 2.79 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 279,328 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16.2 சதவீத வளர்ச்சியாகும்.

பெப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் விபரம்:

இந்தியா – 47,679

ஐக்கிய இராச்சியம்- 30,788

ரஷ்யா – 23,099

ஜேர்மனி – 22,566

சீனா – 20,180

பிரான்ஸ் – 17,174

இதில், இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மொத்த வருகையில் 17 சதவீதத்தைக் கொண்டுள்ளனர்.

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஜனவரி 01 முதல் பெப்ரவரி 28 வரை) இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 556,655 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் வருகை தந்த நாடுகளின் பட்டியல்:

இந்தியா: 99,740 சுற்றுலாப் பயணிகள்

ஐக்கிய இராச்சியம்: 60,328 சுற்றுலாப் பயணிகள்

ரஷ்யா: 50,233 சுற்றுலாப் பயணிகள்