வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வந்த புத்தளம் ஆதார வைத்தியசாலையை, இனி மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த முக்கிய மாற்றத்தின் மூலம், குறித்த வைத்தியசாலையை ‘A’ தர ஆதார வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலை 746 கட்டில் வசதிகளைக் கொண்டது.
சுமார் 4 மில்லியன் மக்களுக்குச் சிறந்த சுகாதாரச் சேவையை இந்த வைத்தியசாலை வழங்கி வருகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இந்த வைத்தியசாலையில் பின்வரும் மாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன:
தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU) நவீனமயமாக்கல்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தரமுயர்த்தல்.
விசேட நிபுணத்துவ மருத்துவ சேவைகளை மேம்படுத்தல்.