ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குத் தனது நாட்டின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஸ்பெயின் மீதான பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்துவதாக அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியப் போவதில்லை என ஸ்பெயினின் உப பிரதமர் மரியா ஜேசஸ் மான்டெரோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:
“எந்தவொரு அச்சுறுத்தலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், எமது நாட்டின் விழுமியங்களை உறுதியாகப் பாதுகாப்போம்,” எனத் தெரிவித்தார்.
ஈரான் மீதான போர் மிகப்பெரிய உலகளாவிய பேரழிவைத் தூண்டும் என அவர் எச்சரித்தார்.
ஒருவரின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக உலகிற்குத் தீமை விளைவிக்கும் எந்தவொரு செயலுக்கும் தாங்கள் கூட்டாளியாக இருக்க முடியாது என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.