சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விற்பனை நோக்கத்திற்காக சுமார் 220 சிகரெட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்வம் தொடர்பில் இந்திய பிரஜை ஒருவரையும் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நுவரெலியா இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நுவரெலியா மது வரித் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைதாகினர்.
கைதாகிய சந்தேக நபர்கள் இருவரும் நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், தங்கள் குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் தலா ரூ. 20,000 அபராதம் விதித்து இருவரையும் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
