ஐசிசி 2026 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று (மார்ச் 05) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இன்று இரவு 7.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும்.
ஏற்கனவே நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணியுடன் இன்றைய வெற்றியாளர்கள் மோதவுள்ளனர்.
மும்பை மைதானத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தத் தீர்மானமிக்க போட்டி நடைபெறுகிறது.