BREAKING NEWS

பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர்: சர்ப்ராஸ் அகமது நியமனம்!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர்: சர்ப்ராஸ் அகமது நியமனம்!

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அந்த அணியின் முன்னாள் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமது நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதற்கட்டமாக அடுத்த 5 மாத காலப்பகுதிக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, பாகிஸ்தான் அணியைத் தயார்படுத்துவதே சர்ப்ராஸின் முதல் பணியாகும்.

38 வயதான சர்ப்ராஸ் அகமது, பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகள், 117 ஒருநாள் போட்டிகள் மற்றும் 61 இருபதுக்கு 20 (T20) போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.

2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றபோது, அந்த அணியின் அணித்தலைவராக சர்ப்ராஸ் அகமது திறம்படச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.