BREAKING NEWS

இன்று சில இடங்களில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
இன்று சில இடங்களில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை முன்னறிவிப்பு விபரங்கள் வருமாறு:

தென் மாகாணம், இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும்.

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

பயணங்களை மேற்கொள்ளும் போது அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.