500 லீற்றர் மண்ணெண்ணெயுடன் வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சட்ட விரோத விற்பனைக்காக இந்த மண்ணெண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வாசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் எரிபொருள் என்பவற்றுடன் வாகன சாரதியை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.