BREAKING NEWS

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கான விசேட அறிவிப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கான விசேட அறிவிப்பு

இலங்கையில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்காக அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அமெரிக்க வெளிவிவகார அமைச்சு முக்கிய முன்னுரிமையாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் செயற்பாடுகள் காரணமாக சில பயண திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி வழியாக அமெரிக்காவிற்கு திரும்ப விரும்பும் அமெரிக்க குடிமக்களுக்கு இன்னும் சில வரையறுக்கப்பட்ட போக்குவரத்து வழிகள் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க குடிமக்கள், தூதரக அதிகாரியுடன் நேரடியாக கலந்துரையாட விரும்பினால் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை தூதரகத்துக்கு நேரில் வரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவி தேவையானால் அல்லது மேற்கண்ட நேரத்தில் வர முடியாவிட்டால், அமெரிக்க குடிமக்கள் சேவைகள் பிரிவை +94 11 202 8500 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும்,
https://tinyurl.com/ACS-Visa-Navigator என்ற இணைப்பின் மூலம் மின்னஞ்சல் அனுப்பியும் தொடர்பு கொள்ள முடியும்.

அத்துடன், வெளிநாட்டுப் பயணங்களில் இருக்கும் அனைத்து அமெரிக்க குடிமக்களும் அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது தூதரகத்திலிருந்து பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய தகவல்களை பெற STEP (Smart Traveler Enrollment Program) திட்டத்தில் http://step.state.gov இணையதளம் வழியாக பதிவு செய்யுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.