BREAKING NEWS

அரிசி அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு அபராதம்

PR
priya priya punidha in Latest Updates
Report
அரிசி அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு அபராதம்

சேனையூர் பிரதேசத்தினைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அரிசியின் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் மூலம் மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தநிலையில், குறித்த சந்தேக நபர் நேற்று (05) குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் 125,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதவான்  தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் வழக்கானது நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.