உலக பிறப்பு குறைபாடு தினத்தை முன்னிட்டு, அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை வைத்திய சங்கத்தின் (SLMA) கேட்போர் கூடத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.
பிறப்பு குறைபாடுகள் (Birth Defects) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துதல்.
சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.