BREAKING NEWS

வட, கிழக்கு கல்வி மேம்பாட்டுக்கு ஜப்பானின் 32 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
வட, கிழக்கு கல்வி மேம்பாட்டுக்கு ஜப்பானின் 32 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் மனிதப் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக, ஜப்பானிய அரசாங்கம் 32 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை அமைத்தல். இதில் பாலர் வகுப்பறைகள், தகவல் தொழில்நுட்ப அலகுகள் மற்றும் தங்குமிட வசதிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இது பெண் பிள்ளைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தின் 2100 மாணவர்களுக்கான போஷாக்கு உணவு வசதிகளை மேம்படுத்தல்.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசொமடா (Akio Isomata) தலைமையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

1989 ஆம் ஆண்டு முதல், ஜப்பான் அரசாங்கம் இவ்வாறான அடிமட்ட மனிதப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக (GGP) இதுவரை 62 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.