ஈரான் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 200 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் எட்டு மாதக் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளமான X தளத்தில் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ள அமைச்சின் பேச்சாளர் ஹொசைன் கெர்மான்பூர், தற்போதைய கள நிலவரம் குறித்து பல்வேறு விபரங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது 2,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 552 பேர் சிறுவர்கள். காயமடைந்தவர்களில் நான்கு மாத பெண் குழந்தையும் அடங்கும்.
மேலும் இப்போரின் விளைவாக இதுவரை 8 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏவுகணைத் தாக்குதல்களால் இதுவரை 11 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.