BREAKING NEWS

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.