BREAKING NEWS

ஒரே நாளில் இரண்டு முறை எகிறியது தங்க விலை! இலங்கையில் புதிய உச்சம்.

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
ஒரே நாளில் இரண்டு முறை எகிறியது தங்க விலை! இலங்கையில் புதிய உச்சம்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தின் நேரடி எதிரொலியாக இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (07) வரலாறு காணாத ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு பவுண் தங்கம் 410,000 ரூபாயாக இருந்த நிலையில், மாலையில் மேலும் 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இன்றைய புதிய தங்க விலை நிலவரம்:

24 கரட் தங்கம்: ஒரு பவுண் 412,000 ரூபா (ஒரு கிராம்: 51,500 ரூபா)

22 கரட் தங்கம்: ஒரு பவுண் 381,000 ரூபா (ஒரு கிராம்: 47,625 ரூபா)

சர்வதேச சந்தையில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக உள்நாட்டிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன