இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு ஈடுஇணையற்றது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஆடைத் தொழில், பெருந்தோட்டம், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மூலம் நாட்டின் 52% மக்கள் தொகையைக் கொண்ட பெண்கள், பொருளாதாரத்தின் பிரதான சக்தியாக விளங்குகின்றனர்.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகள் மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை ஒரு வரலாற்று மைல்கல்.
வேலைத்தளம், போக்குவரத்து மற்றும் அரசியல் களங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கவும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்யவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.
டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோரை உருவாக்கி, சர்வதேச அளவில் அவர்களின் வலிமையை வெளிப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
வீடு முதல் நாடு வரை பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை ஒரு நாளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், நிரந்தரமான மாற்றத்தை நோக்கிப் பயணிப்போம் என ஜனாதிபதி தனது செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.