BREAKING NEWS

வடக்கின் போர்: 119-வது ஆண்டு கிரிக்கெட் சமரில் யாழ். மத்திய கல்லூரி மகுடம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
வடக்கின் போர்: 119-வது ஆண்டு கிரிக்கெட் சமரில் யாழ். மத்திய கல்லூரி மகுடம்!

நூற்றாண்டு கால பாரம்பரியம் மிக்க யாழ். மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 119-வது ‘வடக்கின் போர்’ (Battle of the North) கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி 3 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (05) ஆரம்பமான இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் சென். ஜோன்ஸ் அணி 119 ஓட்டங்களையும், யாழ். மத்திய கல்லூரி அணி 95 ஓட்டங்களையும் பெற்றன. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய சென். ஜோன்ஸ் அணி 223 ஓட்டங்களைக் குவித்து, எதிரணிக்கு 248 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதி நாளில், 248 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி, 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்று வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. 119-வது ஆண்டு சமரில் மகுடம் சூடிய மத்திய கல்லூரி வீரர்களைப் பழைய மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.