லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளபதிகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இன்று (08.03.2026) அதிகாலை, பெய்ரூட்டின் பிரபலமான சுற்றுலாத் தலமான ரௌஷே (Raouche) பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையை குறிவைத்து இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக லெபனான் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.