BREAKING NEWS

விழிப்புடன் இருக்குமாறு கட்டார் வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
விழிப்புடன் இருக்குமாறு கட்டார் வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டிற்கான இலங்கை தூதுவர் சித்தாரா கான் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தூதரகத்தின் முக்கிய வழிகாட்டல்கள்:

சவால்கள் நிறைந்த இந்தச் சூழலில் இலங்கையர்கள் நிதானமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.

கட்டார் அரசாங்கம் அவ்வப்போது வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டல்கள் மற்றும் அவசர கால அறிவிப்புகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

அபாயகரமான அல்லது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து விலகி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.