சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) விடுத்த விசேட அழைப்பினை ஏற்று, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
நேற்று (08.03.2026) நள்ளிரவு பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கிப் புறப்பட்ட அவர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின பிரதான நிகழ்ச்சியில் விசேட உரையாற்றவுள்ளார். இத்தகவலை அவர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபடவுள்ளார். பெண்களின் வலுவூட்டல், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இச்சந்திப்புகளில் விரிவாகக் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.