தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இரசிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2026 பொங்கல் விருந்தாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
தற்போது படத்தின் வெளியீட்டு திகதியை எதிர்நோக்கி இரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இன்று நடைபெறவிருந்த தணிக்கை திருத்தக் குழுவின் திரையிடல் ரத்து செய்யப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று படம் திரையிடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அடுத்து எப்போது தணிக்கை திருத்தக் குழு படத்தை ஆய்வு செய்யும் என்பதும், வெளியீட்டு திகதி எப்போது அறிவிக்கப்படும் என்பதும் இன்னும் மர்மமாகவே உள்ளது. தணிக்கை நடைமுறைகள் முடிவடைந்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதால் இரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.