BREAKING NEWS

விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு: சாட்சி விசாரணை 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு: சாட்சி விசாரணை 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை மார்ச் 18ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இச்சம்பவம் குறித்து சாட்சியளிக்க இன்னும் இருவர் உள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். இதனைக் கருத்திற்கொண்ட நீதிவான், மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக வழக்கை வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.